Hindu Baby Girl Names | Latest Modern Unique | A to Z

பாக்கு மருத்துவ பயன்கள் | Areca catechu Benefits | Betel Palm Pakku guvak

பாக்கு மருத்துவ பயன்கள் | Areca catechu Benefits | Betel Palm Pakku guvak

கமுகு (பாக்கு) (Areca catechu) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "கமுகு (பாக்கு)" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம்.

கமுகு (பாக்கு) பயன்படும் பகுதிகள் (Part Used):

விதை (Seed)
சாறு (Fresh Juice )
துளிர் இலை (Tender leaf)
வேர் (Root)

கமுகு (பாக்கு) மருத்துவ பயன்கள்:(Areca catechu Benefits)

1. கமுகின் இளம்குரத்தை எண்ணெய் விட்டு வதக்கி வாத வலிக்கு வைத்துக் கட்டலாம்.

2. பாக்கை உலர்த்தி பொடித்து அதில் 12 – 24 கிராம் எடை எடுத்து சர்க்கரை சேர்த்து சாப்பிட செரியாக் கழிச்சல், சிறுநீர் நோய்கள் தீரும்.

3. வயிற்றுப் புழுக்களுக்குப் பாக்குத் தூளை உலர்த்தி எடுத்து 2 கிராம் உடன் 20 கிராம் பழச்சாறு விட்டு அரைத்துக் கொடுக்கலாம்.

4. பாக்கை குடிநீரிட்டு வாய் கொப்பளித்து வர பல்லீறில் உண்டாகும் நோய்கள் தீரும்.

5. கொட்டைப் பாக்கைச் சுட்டுச் சாம்பலாக்கி அதே அளவு காகக்கட்டியும் இலவங்கமும் பொடிசெய்து பல்துலக்கி வர பல்நோய்கள் தீரும்.

6. வேரை குடிநீரிட்டு வாய்கொப்பளிக்க உதட்டுப்புண்களும் முரசில்ஏற்படும் புண்களும் தீரும்.


"கமுகு (பாக்கு)" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.

Botanical Name: Areca catechu
Common Name:Betel Palm, Areca palm, Areca-nut palm

Tamil: அடைக்காய் atai-k-kay, சகுந்தம் chakuntam, சாமரபுட்பம் chamara-putpam, கமுகு kamuku, கந்தி kanti, கூந்தற்கமுகு kuntar-kamaku, பூகம் pukam, விம்பு vimpu Hindi: चामरपुष्प chamarpushpa, गुवाक guvak, गूआ, गुवा guwa, खपुर khapur, पूग pug, पूगी pugi, पुंगी pungi, सुपारी supari, उद्वेग udveg
Manipuri: ক্ৱা পাম্বী Kwa pambi
Marathi: पोफळ pophal, पोफळी pophali, पूग pug, पूगफल pugaphal, पुगीफल OR पुगीफळ pugiphala, सुपारी supari
Kannada: ಅಡಕೆ adake, ಅಡಿಕೆ adike
Bengali: সুপারি supari
Malayalam: കമുക് kamuk, കവുങ്ങ് kavung
Telugu: ఘోంట ghonta, ఖపురము khapuramu, క్రముకము kramukamu, పోక poka, పూగము pugamu
Sanskrit: अकोटः akoth, चामरपुष्प chamarpushpa, गुवाकः guvakah, खपुर khapur, पूगफल pugaphal, पूगः pugh, पूगी pugi, उद्वेग udveg, वल्कतरुः valktaruh
Nepali: सुपारि supari
Konkani: पॉफळ pophala, सुपारी supari
Gujarati: ઍરિકૅ ayrike, સોપારી sopari