Hindu Baby Girl Names | Latest Modern Unique | A to Z

ஆமணக்கு பயன்கள் | Ricinus communis Benefits | Castor Oil


ஆமணக்கு (Ricinus communis) மருத்துவப்பயன்கள் என்னென்ன? "ஆமணக்கு" ஐ எவ்வாறு உபயோகப்படுத்துவது? மற்ற பகுதிகளில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? போன்ற கேள்விகளுக்கு பதில் காணலாம். "ஆமணக்கு" பின்வரும் பெயர்களில் அழைக்கப்படுகிறது.
Botanical Name: Ricinus communis
Common Name: Castor bean, Castor oil plant, Wonder tree
Tamil: ஆமணக்கு Amanakku, விளக்கெண்ணை Vilakkennai, Kottaimuttu
Hindi: Arandi अरंडी
Assamese: Era-gach
Malayalam: Chittamankku
Kannada: Oudla
Bengali: Veranda
Manipuri: কেগে Kege

ஆமணக்கு பயன்படும் பகுதிகள் (Part Used):

இலை (Leaf)
விதை (Seed)
எண்ணெய் (Oil)
வேர் ( Root)

ஆமணக்கு மருத்துவப்பயன்கள்:(Castor Oil Benefits)

1. வலியுள்ள மூட்டுக்களி;ல் ஒத்தடம் கொடுப்பதற்காக இதர வாதத்தைத் தணிக்கும் இலைகளுடன் சேர்த்து சிறிது சிறிதாக அரிந்து இதன் இலைகளை பொட்டலமாகக் கட்டி நீராவியில் அவித்து உபயோகிக்கலாம்.

2. பிரசவித்த பெண்களுக்கு வழங்கப்படும் மூலிகை குளியலில் இதன் இலைகளை இதர சில இலைகளுடன் சேர்த்து அவித்த நீரைப் பயன்படுத்தலாம்.

3. வேரை குடிநீர் செய்து அதில் கொஞ்சம் பூநீறு சேர்த்து காலை, மாலையாக 3 – 5 நாட்களுக்குக் கொடுக்க பக்கசூலை குணமாகும்.

4. சிற்றாமணக்கின் வித்தின் ஓட்டை நீக்கி பருப்பை பச்சையாக அரைத்து கட்டிகளின் மேல் வைத்துக் கட்ட கட்டிகள் எளிதில் பழுத்து உடையும்.

5. ஆமணக்க எண்ணெயை 15 – 30 மி.லீ கொடுத்துவர பேதியாகும்.